இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 'சாம்பியன்’ பட்டம் வென்றார்.
ரோம் நகரில் களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகதரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் 31 வயது உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும் பிரெஞ்சு ஓபன் சாம்பியனுமான கோகோ காப்புடன் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினார். ஸ்விடோலினா 6-4, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விடோலினாவுக்கு 1,000 தரவரிசை புள்ளியுடன், ரூ.11% கோடி பரிசாக கிடைத்தது. 2-வது இடம் பெற்றகோகோ காப்புக்கு ரூ.6% கோடி கிட்டியது.
வெற்றிக்கு பிறகு 'இங்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இருந்து நிறைய பாடங்களை கற்றேன். இது அடுத்து நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு உத்வேகம் அளிக்கும்' என்று ஸ்விடோலினா கூறினார்.
0
Leave a Reply